வெள்ளி, 16 மார்ச், 2018

கூட்டணி உருப்படியாக வேண்டுமானால் சங்கரி விலக வேண்டும் - எனது கடிதங்கள்


மூளாய், 10.03.2018

திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் செயலாளர் நாயகம், தமிழர் விடுதலைக் கூட்டணி. அன்புடையீர்,

இன்று 10.03.2018 சனிக்கிழமை மதியம் அலுவலகத்துக்கு வந்தபோது தாங்கள் உள்ளே வந்த வாகனத்திலிருந்து பார்த்துவிட்டு மேலே போய் - திரும்ப வந்து என்னுடன் கதைத்தது எனக்கு ஆச்சரியத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்துகிறது! என்மீது கொஞ்சம் பயம் இருக்கிறது என்று மட்டும் புலப்படுகிறது!

கட்சி குறித்து நீங்களே தனித்து முடிவெடுக்க முடியாது! யார் கட்சிக்கு வரலாம் போகலாம் என – அது ஒன்றும் உங்களுடைய முதுசம் அல்ல – தந்தை செல்வா விட்டுச் சென்ற சொத்து! பலருடைய அர்ப்பணிப்பும் - நேர்மையும் அங்கு இருக்கிறது! தலையாட்டும் ஒரு முட்டாள் கும்பலோடு சேர்ந்து நினைத்ததை இனியும் சாதிக்கலாம் என்று கனவு காணாதீர்கள்!

உடனடியாக கட்சியின் பொதுச் சபையை கூட்டி இன்றைய நிலை பற்றி ஆராய வேண்டும்! தேர்தலுக்கு முன்பு கூடாத செயற்குழு மூத்த துணைத் தலைவரின் மறைவுக்கு கூடியதாக சாட்டுப் போக்கெல்லாம் சொல்லவேண்டாம்! கட்சியின் தலைவர் முன்பு இறந்தபோது கூட்டம் சுடினீர்களா? யாருக்கு காது குத்துகிறீர்கள் என்று தெரியவில்லை!

கட்சியின் உண்மையான விசுவாசி

(ஒப்பம்)தங்க. முகுந்தன்.

copies - தலைவர். திரு. போ சிவசுப்பிரமணியம் அவர்கள். ஊடகங்கள்

-------------------------------------

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி அவர்கள் தனது இஷ்டத்துக்கு கட்சியை நடத்தாமல் கலந்தாலோசித்து செயற்படுவது அவசியம் - கட்சியை பாரிய அதள பாதாள நிலைக்கு கொண்டுவந்தமைக்கான பொறுப்பை ஏற்று உடன் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுமைடய அபிமானம் பெற்ற ஒரு கட்சியின் அவல நிலை பொறுக்க முடியாத ஒரு உண்மைக் கட்சித் தொண்டனின் புலம்பலாக இது அமையட்டும்! கட்சியில் உள்ள அனைத்து அங்கத்தவர்களும் இந்த விடயத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். சில தகவலுக்காக பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை பற்றி அலசி - தற்போதைய கட்சியின் வீழ்ச்சியை நிறுத்தி ஏதேனும் செய்ய முயற்சிக்க வேண்டுகிறேன். 1970ல் தமிழரசுக் கட்சி 19 இடங்களில் போட்டியிட்டு 245727 வாக்குகளைப் பெற்று 13 இடங்களைக் கைப்பற்றியது. ஆகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 12 இடங்களில் போட்டியிட்டு 15567 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைப் பெற்றது. 1977ல் இரண்டு கட்சிகளும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 421488 வாக்குகள் பெற்று 18 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியானது. பெரும்பான்மையாக ஐக்கிய தேசியக் கட்சி 154 இடங்களில் போட்டியிட்டு 3179221 வாக்குகள் பெற்று நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற அதேவேளை சுதந்திரக் கட்சி 147 தொகுதிகளில் போட்டியிட்டு 1855331 வாக்குகளைப் பெற்று 8 இடங்களை மட்டும் பெற்று 3ஆவது கட்சியாக இருந்தது. 1981ல் மாவட்ட அபிவிருத்திச் சபையில் கூட்டணி பெற்ற வாக்குகள் 468560. இது தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து பெற்ற வாக்கினை விட அதிகம் என்பது சொல்லாமல் தெரியும்.

1982ல் ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் குமார் பொன்னம்பலம் 87263 கொப்பேகடுவ 77300 ஜே.ஆர். 44780 நிராகரிக்கப்பட்டவை 10610. வன்னியில் ஜே.ஆர் 32834 கொப்பேகடுவ 23331 குமார் பொன்னம்பலம் 11521 நிராகரிக்கப்பட்டவை 2447. மட்டக்களப்பில் ஜேஆர் 48094 குமார் பொன்னம்பலம் 47095 கொப்பேகடுவ 21688 நிராகரிக்கப்பட்டவை 2879 திகாமடுல்லவில் ஜேஆர் 90772 கொப்பேகடுவ 53096 குமார் பொன்னம்பலம் 8079 நிராகரிக்கப்பட்டவை 2101. திருகோணமலையில் ஜேஆர் 45522 கொப்பேகடுவ 31700 குமார் பொன்னம்பலம் 10068 நிராகரிக்கப்பட்டவை 1795.

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் 1989 ல் ஐ.தே.கட்சி 2838005 வாக்குகள் பெற்று 125 இடங்களையும், சுதந்திர்கட்சி 1785369 வாக்குகள் பெற்று 67 இடங்களையும், ஈரோஸ் 229877 வாக்குகள் பெற்று 13 இடங்களையும், 4 கட்சிகள் இணைந்து கூட்டணி 188594 வாக்குகள் பெற்று 10 இடங்களையும் பெற்றிருந்தன.

1994 ல் சுந்திரிகாவின் மக்கள் கூட்டணி 3887823 வாக்குகள் பெற்று 105 ஆசனங்களையும், ஐ.தேச.கட்சி 3498370 வாக்ககள் பெற்று 94 இடங்களையும், ஈபிடிபி 10744 வாக்ககள் பெற்று 9 இடங்களையும், ஸ்ரீல.மு.காங்கிரஸ் 143307 வாக்குகள் பெற்று 7இடங்களையும் யாழ். மாவட்டம் தவிரந்த ஏனைய 4 மாவட்டங்களில் கூட்டணி தனித்து போட்டியிட்டு 132461 வாக்குகள் பெற்று 5இடங்களையும், ஈரோஸ், புளொட், ரெலோ ஆகியன சேர்ந்து போட்டியிட்டு 38,028 வாக்ககள் பெற்று 3இடங்களையும் பெற்றன.

2000ம் ஆண்டு சந்திரிகாவின் மக்கள் கூட்டணி 3900901 வாக்ககள் பெற்று 107இடங்களையும், ஐ.தே.கட்சி 3477770 வாக்குகள் பெற்று 89 இடங்களையும், ஜே.வி.பி 518774 வாக்குகள் பெற்று 10இடங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துப் போட்டியிட்டு 106033 வாக்குகள் பெற்று 5 இடங்களையும்முஸ்லிம் கூட்டணி 197983 வாக்குகள் பெற்று 4 இடங்களையும், ஈபிடிபி 50890 வாக்ககள் பெற்று 4 இடங்களையும், ரெலோ 26112 வாக்ககள் பெற்று 3இடங்களையும், தமிழ்க் காங்கிரஸ் 27323 வாக்ககள் பெற்று 1 இடத்தையும் பெற்றன.

2001ல் ஐக்கிய தேசிய முன்னணி 4086026 வாக்ககள் பெற்று 109 இடங்களையும், மக்கள் கூட்டணி 3330815 வாக்குகள் பெற்று 77 இடங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 815353 வாக்ககள் பெற்று 16 இடங்களையும் தமிழ்க் காங்கிரஸ் ஈபிஆர்எல்எப் ரொலோ சுட்டணி அடங்கலான 4 கட்சிகளின் கூட்டமைப்பு 348164 வாக்குகள் பெற்று 15 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 105346 வாக்குகள் பெற்று 5 இடங்களையும், ஈபிடிபி 72783 வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி 16669 வாக்ககள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றன.

2004ல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4223970 வாக்ககள் பெற்று 105 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய முன்னணி 3504200 வாக்குகள் பெற்று 82 ஆசனங்களையும், தமிழ்க் காங்கிரஸ் ஈபிஆர்எல்எப் ரொலோ தமிழரசுக் கட்சி அடங்கலான 4 கட்சிகளின் கூட்டமைப்பு 633654 வாக்குகள் பெற்று 22அசனங்களையும், ஜாதிக ஹெல உறுமய 554076 வாக்குகள் பெற்று 9 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 186876 வாக்குகள் பெற்று 5ஆசனங்களையும், மலையக மக்கள் முன்னணி 49728வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் ஈபிடிபி 24955 வாக்ககள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றன. கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தனித்து சுயேட்சையாக போட்டியிட்டு 5156 வாக்ககள் பெற்றார்.

2010 தேர்தலில் மக்கள் கூட்டணி 4846388 வாக்ககள் பெற்று 144இடங்களைப் பிடித்தது. ஐக்கிய முன்னணி 2357057வாக்குகளைப் பெற்று 60இடங்களையும், கூடடமைப்பு 233190 வாக்குகள் பெற்று 14 இடங்களையும், ஜனநாயக தேசிய முன்னணி 441251 வாக்ககள் பெற்று 7 இடங்களையும் பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணி 9223 வாக்குள் பெற்றது. 2013 வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தான் நியமித்த அனைத்து உறுப்பினர்களையும் தோல்வி காணச் செய்தது. திரு. ஆனந்தசங்கரி அவர்கள் தான் போட்டியிட்ட கிளிநொசசி மாவட்டத்தில் 6ஆவதாக வந்ததுடன் தான் நியமித்த 2 வேட்பாளர்களின் வாக்ககளை விடவும் குறைவான வாக்குகளையே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015 தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி 5098916 வாக்குகள் பெற்று 106 இடங்களையும்,சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும், ஈபிஆர்எல்எப் ரொலோ தமிழரசுக் கட்சி புளொட் அடங்கலான 4 கட்சிகளின் கூட்டமைப்பு 515963 வாக்குகள் பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியதோடு ஜேவிபி 543944 வாக்குகள் பெற்று 6 இடங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 44,193 வாக்ககள் பெற்று 1 இடத்தையும், ஈபிடிபி 33481 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீழ்ச்சிக்கு தனது இஷ்டத்துக்கு முடிவுகளை எடுக்கும் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி அவர்கள் தனது இடை நிலைக் கட்சியான காங்கிரஸின் தலைவர்களான ஜீஜீ மற்றும் குமாருடைய நிலைப்பாட்டில் தனித்து முடிவுகளை மேற்கொள்வது சனநாயகப் பாரம்பரிய முடைய தந்தை செல்வாவின் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பொருந்தாது! தயவு செய்து தனது கட்சியின் பொதுச் சபை மற்றும் நிர்வாக சபையினருடனும் கலந்தாலோசித்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது!

கட்சியின் உண்மைத் தொண்டன் ------------------------------------

பத்திரிகைச் செய்தி – 2018..03.08 கண்ணைமூடிப் பால்குடிக்கும் பூனை - நினைக்குமாம் தான் பால் குடிப்பதை யாரும் பார்க்கவில்லை என்று - அதேபோல - தான் கூறும விடயங்கள் எல்லாம் உண்மை என மக்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கும் குள்ள நரித்தனமுடைய சங்கரிக்கு ஒரு பகிரங்க கடிதம்!

உங்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை 2003இன் இறுதியில் சம்பந்தனுக்கு நேர்ந்தது போல அமைந்துள்ளது. நேர்மையும் துணிவும் இருந்தால் நீங்கள் கூட்டணியின் பொதுச் சபையை உடனே கூட்ட வேண்டும்! அபாண்டமாக கட்சித் தலைவர் மீது குற்றம் சுமத்த வேண்டாம். முதுகெலும்பற்ற உங்கள் அடிவருடிகள் எதுவுமே உங்களுக்கு மாறாக கருத்துத் தெரிவிக்காத நிலையில் உங்களுடைய ஆட்டத்தை சற்று நிறுத்தி தந்தை செல்வா எப்படிக் கட்சி நடத்தினாரோ அப்படி நடத்துங்கள்! ஏகப்பிரதிநிதிப் பிரச்சினையின் பின் வழக்குத் தாக்கல் செய்து சம்பந்தன், மாவை. சேனாதிராஜா போன்றோருடன் ஒத்துழைக்காது தனியே கட்சியை உங்களுக்கு தலையாட்டுபவர்களுடன் வைத்துக்கொண்டு அவர்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு புதிய உறுப்பினர்களை நியமித்து கூட்டணியின் ஸ்ரான்லி வீதி அலுவலகத்தை விற்றிருக்கிறீர்கள்! இதற்காக நீங்கள் கட்சியின் பொதுக் குழுவில் தீர்மானம் மேற்கொண்டீர்களா?

2010 தேர்தலில் கூட்டமைப்பினுடைய கோரிக்கையை நிராகரித்து வாங்கிக் கட்டியதுடன் - 2013ல் மாகாண சபைத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு பின்பு கூட்டமைப்பு எனக்குத் தான் என தேர்தல்கள் திணைக்களத்துக்கு கடிதம் எழுதி அதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நான் கட்சியை விட்டு விலகினேன்! என்னையும் கட்சியின் அங்கத்தவரே இல்லை என ஒரு பத்திரிகைக்கு பதிலும் அளித்திருந்தீர்கள்.

தற்போது பிரதேச சபைத் தேர்தல் காலத்தில் தனித்து நீங்களாகவே ஒவ்வொருவருடனும் கதைத்துவிட்டு இறுதியாக யாரை நீங்கள் எதிரியாக இவ்வளவு காலமும் குறிப்பிட்டு வந்தீர்களோ (உங்களுடைய அண்ணரைக் கொலைசெய்ததாக)அவர்களுடன் சேர்ந்து அவர்களால் சரிந்திருந்த வாக்கு வங்கியை ஓரளவு நிவர்த்தி செய்திருக்கிறீர்கள்! இன்று மாநகர சபை உறுப்பினராக வென்ற உங்களால் நியமிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு 2வருட கடூழியச் சிறைத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலுக்கு முன் கட்சியின் பொதுச் சபையோ அல்லது செயற்குழுவோ கூடியதா? உடனடியாக கூட்டணியின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து பொதுச் சபையை கூட ஏற்பாடு செய்யுங்கள்!

உண்மையுள்ள கட்சித் தொண்டன், தங்க. முகுந்தன். -------------------------------------------

யாழ்ப்பாணம் 07.03.2018. செய்தி

சங்கரிதாக்குவதோ- தாக்கவருவதோ இது முதல் முறையல்ல!

ஏற்கனவே ஸ்ரான்லிவீதியில் 2000 ஆண்டுகளில் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களைஏசிஅவரதுசேட்டைக் கிழித்ததுபலரும் அறிந்தவிடயம். என்னுடன் தர்க்கப்பட்டு எனக்குஅடிக்கவர அவரது மெய்ப்பாதுகாவலர் தடுத்தது 2013 மாகாணசபைத் தேர்தலின் பின் நடந்தது. இன்று தலைவரைத் தாக்க முற்பட்டதும் உண்மையே அவரது முதுகெலும்பு இல்லாத தலையாட்டும் கூட்டம், பின்னாலிருக்கும்வரை- அவர் தான் நினைத்ததைச் செய்வார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பலஉறுப்பினர்கள் எமதுகாரியாலயத்துக்கும் வராமல் - தமிழரசுக் கட்சியிலும் சேராமல் உண்மையானகட்சிவிசுவாசத்துடன் இருப்பதை நானறிவேன்! தந்தைசெல்வாவின் பெயரைப் பயன்படுத்த அருகதையற்ற இவர்கள் மக்களை ஏமாற்றி தமதுபதவிகளை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார்கள்!

கூட்டணியின் மாநாடுகடந்தவருடம் கூட்டப்பட்டபின் ஒருபோதும் செயற்குழு கூடாதநிலையில் - மூத்ததுணைத் தலைவருக்குஅனுதாபம் தெரிவிக்க கூட்டம் கூட்டியதாக சங்கரிகதை அளக்கிறார்! சங்கரியின் திருகுதாளங்களை அவரது கட்சி ஆதரவாளர்களே கடந்த 2013 மாகாணசபைத் தேர்தலில் துண்டுப்பிரசுரமாகவெளியிட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது. இத் தேர்தலில் தனதுகட்சிவேட்பாளர்களிடமே தோற்றுப் போனசங்கரி மனச் சாட்சிப்படி கட்சியைவிட்டுவிலகியிருக்கவேண்டும். கட்சியைதொடர்ந்தும் அவர் அதளபாதாளத்துக்கே இட்டுச் செல்கிறார். 2015 தேர்தலில் படுதோல்வியடைந்தவர் இந்தமுறைசெயற்குழுவைக் கூட்டாமல் தன்னிஷ்டப்படிஈபிஆர்எல்எப் உடன் கூட்டுச் சேர்ந்ததுடன் தனதுகிளிநொச்சியில் படுதோல்வியடைந்துள்ளார். ஏதோஒருநியமனஆசனம் பெற்றிருக்கும் நிலையில் அதையும் தனதுதலையாட்டிகட்குகொடுக்கமுன்வந்துள்ளார். மண்டையன் குழுவோடு இவர் எப்படிச் சேர்ந்தார் என்றுஆதரவாளர்கள் நாம் குழப்பமடைந்தநிலையிலும் அவர்களால் உதயசூரியன் சற்றுவெளியேவந்தமைக்குஅவர்களுக்குநன்றிகள் கூறவேண்டும். 1989களில் முற்றுமுழுதாகதனதுசகோதரனைக் கொண்டவர்களைதவிர்த்துவந்தசங்கரி இம்முறைஈபிடிபியுடன் பேச்சிநடத்திவிட்டுதிடீரெனசுரேசுடன் இணைந்ததன் மர்மமும் தெரியவில்லை. தனதுஇஷ்டப்படிமுடிவுகளைஎடுக்காமல் தந்தையின் ஜனநாயகக் கொள்கைகளைப் பின்பற்றிக் கூடியவிரைவில் பொதுக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனகட்சிஅங்கத்தவர்கள் சார்பாகவேண்டுகிறேன்!ஏற்கனவே இவருக்குஎழுதிய 2 கடிதங்களின் பிரதிகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

தங்களுண்மையுள்ள கூட்டணியின் தீவிரவிசுவாசி தங்க. முகுந்தன் முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர். -----------------------------------------------------

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்துஒதுங்குதல்!

யாழ்ப்பாணம், 30.04.2014.

திரு. வீ.ஆனந்தசங்கரிஅவர்கள், செயலாளர் நாயகம், தமிழர் விடுதலைக் கூட்டணி.

அன்புடையீர்,

தாங்கள் இருக்கும்வரைஎமதுகட்சியாகியதமிழர் விடுதலைக் கூட்டணிஎந்தவிதமானஆக்கபூர்வமானபணிகளையும் மக்களுக்குச் செய்யமுடியாதுஎன்பதால் தாங்கள் எமதுகட்சியைவிட்டுப் போகும்வரைஅல்லதுஉங்களது இறுதிக்காலத்தின் பின்னர் கூட்டணியில் எனதுபணியைநான் செய்யலாம் எனமுடிவெடுத்துள்ளபடியால் இத்தால் நான் கட்சியிலிருந்துஒதுங்கிக்கொள்வதாகஅறியத் தருகிறேன். கடந்த 6.4.2014,மற்றும் 28.4.2014 உங்களுடன் வாக்குவாதப் பட்டபின் இங்கிருப்பதில் அர்த்தமில்லைஎன்பதால் இன்னும் ஓரிருநாட்களில் அலுவலகத்திலிருந்துவெளியேறுவேன் என்பதையும் அறியத்தருகிறேன். மேலும் சிலவிடயங்களைஉங்களுக்குதெரியப்படுத்தவேண்டும் எனபதற்காக இலக்கமிட்டுப் பிரச்சினைகளையும் உங்களுக்குவிளக்கமாககுறிப்பிடவிரும்புகிறேன்.

1. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டம் கடந்த 5.4.2014 சனிக்கிழமைநடைபெறஏற்பாடுகள் செய்தபொழுதுநியாயமாகநீங்களும்,மற்றயவர்களும் செயற்பட்டீர்களாஎன்பதைஉங்களிடம் வினவவிரும்புகிறேன். இக்கூட்டத்திற்குபலஉறுப்பினர்களுக்குஅழைப்பிதழ் அனுப்பாமல் தவிர்த்தமைஎதற்காக?

2. புதிதாகவவுனியாவில் ஒருகிளையைஆரம்பித்துதலைவராகமுன்னையஈபிஆர்எல்எப் பா.உதிரு. இராஜா குகனேஸ்வரனைத் தெரிவுசெய்துஅதன் உறுப்பினர்களை இக்கூட்டத்துக்குஅழைப்பித்துஅவர்களால் 5ஆந்திகதிக் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதையும் பலஎமதுகட்சியின் பழையஉறுப்பினர்கள் இதனால் மனமுடைந்து கூட்டத்திலிருந்துவெளியேறியதையும் நீங்கள் அறிவீர்களா?

3. நீங்கள் பேசும்போதுஉங்கள் பேச்சைஎல்லோரும் கேட்கவேண்டும். ஆனால் மற்றவர்கள் பேசும்போதுஅதை இடைநிறுத்திஅல்லதுஅதற்குஏதேனுமொருமறுமொழி கூறிபேச்சைக் குழப்புவதும் பேசவந்தவிடயங்களைபேசமுடியாதவாறுகுறுக்கீடுசெய்வதால் முழுமையானஅவர்கள் கருத்துக்கள் தெரிவிக்காமல் போவதும் சிலவேளைகளில் பேச்சைமுடிக்குமாறு கூறிதடுப்பதும் நியாயமா? இது 5.4.2014 கூட்டத்தில் நடைபெற்றதாஎனத் தெரியவில்லை. ஆனால் இந்தநடைமுறைநான் கட்சியிலிருந்தகடந்த 1990 களிலிருந்துஉங்களால் மட்டுமல்ல,சம்பந்தன்,சிவசிதம்பரம் ஆகியோர் ஏன் அதற்குமுன்பு 1977களின் பின் அமிர்தலிங்கம் காலத்திலிருந்துநடைபெறுகிறது - இதற்குஒருதடவைகொழும்புதிம்பிரிகஸ்யாய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. இரா. சம்பந்தனுக்குதிருகோணமலைஈழத்துநாதன் சொன்னகருத்துத்தான் எனக்குநினைவுக்குவருகிறது! அதாவதுகட்சியில் நீங்கள் சொல்லுபவைஎல்லாம் கேட்கவேண்டும் என்பதற்காகநாம் ஒன்றும் தெரியாதவர்கள் என்றுஎம்மைஎண்ணிவிடாதீர்கள்! கட்சியில் எல்லாருக்கும் எல்லாஉரிமைகளும் உண்டு. பதவியைவகிப்பதால் நீங்கள் உயர்ந்தவர்கள் என்றஎண்ணத்தைமாற்றிவிடுங்கள்!

4. சாதாரணமாகஒருஅங்கத்தவரைச் சேர்ப்பதென்றால் அவரதுவிண்ணப்பப்படிவம் பொதுச்சபையில் ஆராயப்பட்டுஏற்றுக் கொள்ளப்படுவதேமுறை இந்தநடைமுறை 2004களின் பின் நடைமுறையில் இருக்கிறதாஎன்பதேஎனதுஅடுத்தகேள்வி.

5. கடந்த 2003இன் பின் ஏற்பட்டசிலமுக்கியபிரச்சனைகளால் அன்றிலிருந்து இன்றுவரை 2003 – 2009 வரைவிடுத்தாலும் 2009 இல் நடைபெற்றஎல்லாஅழிவுகளின் பின்னரும் நீங்கள் ஒருவரே கூட்டமைப்புத் தலைவர்களையும் சிலஉறுப்பினர்களையும் விமர்சித்துகடிதங்கள் எழுதிவருகிறீர்கள். ஒருசிலரைத் தவிரஏனையோர் பெருந்தன்மையுடன் இருப்பதால் உங்களின் நடவடிக்கைஎல்லைமீறிப் போவதைநாம் சிலர் கட்சியில் இருந்தும் எதுவிதகருத்தையும் தெரிவிக்காமல் இருப்பதுஉங்களுக்குவாய்ப்பாக இருக்கிறதுபோலத் தெரிகிறது. இதுவரைகாலமும் சிலவேளைஉங்களிடம் நேரடியாககருத்துக்களைத் தெரிவித்துவாக்குவாதப் பட்டிருந்தாலும் இன்றுஉங்கள் பாணியில் உங்களுக்குஒருகடிதம் வரையமுடிவெடுத்துள்ளேன். ஏனெனில் உங்களுக்குசிலவிடயங்கள் தெரியாமல் நினைத்தபாட்டுக்குஎழுதிவருகிறீர்கள். ஆனால் நான் ஆதாரத்தோடேஎழுதுகிறேன்.

6. 1977இல் தமிழரசுக்கட்சியின் சின்னம் தேரதலில் பாவிக்கப்பட்டபின்னர் முடக்கிவைக்கப்பட்டதாகஎழுதிவருகிறீர்கள். அதற்குமுன் உங்ளுக்குத் தெரியாதஒருவிடயம் 1989 ஆடி 13 அமரர்கள் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் கொல்லப்பட்டபின் மாவை. சேனாதிராசாபாராளுமன்றஉறுப்பினராக இருந்தகாலத்தில் அன்றைய ஜனாதிபதிபிரேமதாசா கூட்டியசர்வகட்சிமாநாட்டில் பிரதிநிதிகள் - கட்சிசார்பில் கலந்துகொண்டபோதுஅதிகமானவர்கள் கலந்துகொள்ளவசதியாகஎமது கூட்டணியிலிருந்தும் தமிழரசுக் கட்சியிலிருந்தும் அந்தபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். குறிப்பாகநீங்கள் அந்தக் காலத்தில் இங்கிருக்கவில்லை. இந்தியாவுக்குஅடிக்கடிபோய் வருவீர்கள்! நீலன் திருச்செல்வம்,சட்டத்தரணிசிவபாலன் ஆகியோர் கூட்டணிசார்பிலும்,தங்கத்துரை,சின்னத்துரைஆகியோர் தமிழரசுக் கட்சிசார்பிலும் கலந்துகொண்டார்கள். திரு. சேனாதிராசாபாராளுமன்றஉறுப்பினர் என்றகோதாவில் கூட்டணிசார்பில் கலந்துகொண்டாராஅல்லதுதமிழரசுக் கட்சியின் செயலாளர் என்றுஅந்தக் கட்சியில் பங்குகொண்டாராஎன்பதைஅவரிடம் தான் கேட்டுத் தெரியவேண்டும். திரு இராஜேந்திரனும் இடைக்கிடைபோனதாகஞாபகம். 2004 இல் புலிகளைஏகப்பிபரதிநிதிகளாகஏற்றுக் கொண்ட கூட்டணியினரின் பெரும்பாலானோரும்,விடுதலைப் புலிகளும், ஏனைய இயக்கங்களும் தாம் தேர்தலில் நிற்பதற்காகதமிழரசுக் கட்சியைதெரிவுசெய்தார்கள். என்னதான் ஆயுதப் போராட்டத்தைஏற்றிருந்தாலும் ஜனநாயகவழியில் தேர்தல் என்றுவரும்போதுதந்தையின் பெயரையும் அவரதுகட்சியின் சின்னத்தையும் பாவித்தாலேயேதமக்குவாய்ப்புஉண்டுஎன்பதைநன்குஅறிந்துஅதில் போட்டியிட்டுவெற்றியும் பெற்றார்கள். பேச்சுவார்த்தைசரிவராதுஎன்றுகூறிஆயுதப் போராட்டம்தான் தீர்வுஎன்றுபுறப்பட்டஅனைவரும் 1983 – 1987 காலங்களில் கூடுதலாகஎமதுகட்சியைவிமர்சித்தேவந்தார்கள்! கூட்டணித் தலைவர்களில் ஒருசிலரைக் கொன்றதும் இவர்களே! பாராளுமன்றைஅவமதித்துஉறுப்பினர்களைக் கொன்றுமக்களுக்குவிடிவுதேடப் புறப்பட்டவர்கள் இன்றுமக்களைமறந்துசுகபோகம் அனுபவிக்கிறார்கள்! இதில் விடுதலைப் புலிகளின் அரசியற்கட்சிபதிவிலிருந்தும் அவர்கள் தமதுசின்னத்தையோகட்சிப் பெயரையோஎந்தத் தேர்தலிலும் பாவிக்கவில்லை. ஆனால் இரு தடவைகள் தந்தையின் கட்சியானஎமது கூட்டணிதமிழர்பகுதியில் தேர்தலில் பெரும்பான்மையாகவராதுபோனதைநீங்கள் அறிந்துவைத்திருப்பீர்கள். காலத்தின் தேவைகருதிநான் அதைக் குறிப்பிட்டாகவேண்டும். ஒன்று 1989இல் நடந்தபாராளுமன்றத் தேர்தல் மற்றது 1994 பாராளுமன்றத் தேர்தல். இந்த 2 தேர்தல்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணிவடக்குகிழக்கில் பெரும்பான்மையைப் பெறவில்லை. 1989இல் ஈரோஸ் அமைப்பின் சுயேட்சைக் குழு 13 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. கூட்டணிக்கு 10 இடங்கள். 1994இல் ஈபிடிபிக்கு 9 ஆசனங்கள் கூட்டணிக்கு 5 ஆசனங்கள்.

7. எல்லாக் கடிதங்களிலும் திரு. சேனாதிராசாவைநான்தான் பாராளுமன்றஉறுப்பினராக்கினேன் என்றுகுறிப்பிடுகிறீர்கள். நீங்கள் மட்டும் அல்ல. கட்சியின் எல்லாஉறுப்பினர்களும் இணைந்தேஅந்த முடிவை எடுத்தார்கள்! உங்களுக்குஆசையிருந்திருந்தால் அதைசொல்லியிருக்கலாம். உங்களால் சொல்லமுடியவில்லை. ஏனெனில் பலரும் எம்.பிபதவியில் ஆசைப்பட்டிருந்தார்கள் என்பதைநான் அறிவேன். 1994தேர்தலின் பின் திருமலையில் தோல்வியடைந்த இரா. சம்பந்தனும்,அம்பாறையில் தோல்வியடைந்தமாவை. சேனாதிராசாவும் ஆதரவாளர்களுடன் வந்தபோதுநல்லவேளைவவுனியாவில் தலைவர். சிவசிதம்பரத்திற்குஅடுத்ததாகநீங்கள் வந்தபடியால் சிவசிதம்பரம் கண்டிப்பாகவவுனியாக் கிளையினருக்கு கூறிவிட்டார் - ஒருவரும் வரப்படாதுஎன்று. தேசியப்பட்டியலில் பெயர்குறித்தகலாநிதிநீலன் திருச்செல்வம் அந்த கூட்டத்தில் அடுத்தவர்கள் பதவிக்குஆசைப்படும் கதைகளைப் பார்த்து இறுதியில் தனதுநிலைப்பாட்டைத் தெரிவித்தபோதுகண்கலங்கியது இன்றும் எனக்குஞாபகத்திலிருக்கிறது.

8. நான் அதிகம் பழையவரலாறுகளைக் குறிப்பிடவிரும்பவில்லை. ஆனாலும் அமரர் மு. சிவசிதம்பரத்தின் மறைவின்பின் பெயர் குறிப்பிடப்பட்டதிரு. முத்துலிங்கத்துக்குஎம்.பிபதவிவழங்காதுசம்பந்தனும், ஜோசப்பும் அவரதுஎடுபிடிகளும் சிவசிதம்பரத்தின் பூதவுடலுக்குதீமூட்டியவுடனேயேமுகமாலைக்குப் போய் விடுதலைப் புலிகளிடம் கோள்மூட்டியநிகழ்வுகளையும்,அதன்பின் எமதுகட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டதும் நாம் மறப்பதற்கில்லை.

9. கடந்தமாகாணசபைத் தேர்தலில் 5 கட்சிகளின் தலைவர் என்றகோதாவில் நடைபெற்ற கூட்டத்தில் நீங்கள் இதயசுத்தியோடுபங்குபற்றினீர்களா? முதலாவது கூட்டத்தில் பங்குபற்றியபிறகுஎச்சந்தர்ப்பத்திலாவதுநீங்கள் அவர்களுடன் தொடர்புகொண்டீர்களா? தேர்தல் நியமனப் பத்திரத்தில் கையெழுத்திடமுதன்முதல் தமிழரசுக் கட்சிஅலுவலகத்திற்குப் போனபோது,சிறிதுநேரம் கழித்துநான் அங்குவந்ததுஉங்களுக்குஞாபகமிருக்கும்.

10. கடந்த 27ஆந்திகதி கடைசியாகநான் பிரச்சினைப்பட்டவிடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைஉங்களிடம் தருமாறுகோரிதேர்தல் ஆணையாளருக்குகடிதம் எழுதமுற்பட்டபோதே! அதாவதுபத்திரிகைகளுக்கு 2001இல் வெளியிட்டகடிதத்தைக் காட்டிதேர்தல் ஆணையாளரிடம் நியாயம் கோருவதுஎவ்விதத்தில் நியாயம் எனஎனதுஅறிவுக்குஎட்டியவரைஉங்களுக்குக் கூறியும் நீங்கள் கடிதம் எழுதியேதீரவேண்டும் என்றநிலைப்பாட்டில் கொழும்பிலிருந்துகடிதம் தயார்பண்ணிஅனுப்பிவைத்துள்ளீர்கள்! இதுநியாயமாகஎனக்குப் புலப்படவில்லை. 2013 தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் பதவிக்காக 2004இலிருந்து கட்டிக்காத்தகொள்கையைவிட்டு - வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டுஅவர்களதுதுரோகத்தனத்தால் படுதோல்வியடைந்தபின் தேவையற்றவிதத்தில் இருக்கும் கொஞ்சமரியாதையையும் இழக்கவே இந்தப் புதியதாண்டவம் ஆடுகிறீர்கள்! கடிதம் எழுதியேசாதனைபடைக்கும் நீங்கள் 2009இன் பின் யுத்தம் முடிவடைந்தபிறகு கூட்டமைப்பால் ஒழுங்காகநிரப்பப்படாதுநிராகரிக்கப்பட்ட 2 சபைகளில் வெற்றிபெற்றவாக்குகளைக் கூட தக்கவைக்கமுடியவில்லை! 2000ஆம் ஆண்டுதேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டுதோல்வியடைந்ததிரு. சித்தார்த்தன் கடந்தமாகாணசபைத் தேர்தலில் 3ஆவதாக வரமுடியுமானால் நீங்கள் இங்குபோட்டியிட்டிருந்தால் கட்டாயம் வெற்றிபெற்றிருக்கமுடியும். ஆனால் வம்புக்குகிளிநொச்சிமாவட்டப் பாராளுமன்றஉறுப்பினருடன் மல்லுக்கட்டப் போய் கடைசியாகநீங்கள் உங்கள் கட்சிஉறுப்பினர்களிடமேவாங்கிக்கட்டியதுதான் மிச்சம். 2010 பாராளுமன்றத் தேர்தலில் தெரிவானகௌரவ. சிறீதரனின் அலுவலகம் இருக்கத் தக்கதாககிளிநொச்சியில் எமதுகட்சிஅலுவலகத்தைதிடீரென கூட்டமைப்புஅலுவலகமாகமாற்றியபோதேஉங்கள் இயலாமைதெரிந்துவிட்டது.

இறுதியாகஎதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் அவர்கள் மட்டுமல்ல கூட்டணியே 1981 மாவட்டஅபிவிருத்திச் சபைத் தேர்தலின் பின் நடைபெற்றவன்செயல்களுக்காககுறிப்பாக நூலகஎரிப்புக்குசர்வதேசவிசாரணையைக் கோரியிருந்தது. தலைவர் சிவாஐயாமிகஅருமையாக இந்தவிடயங்களைநடைபெற்றஉண்ணாவிரதக் கூட்டங்களில் தெரிவித்திருக்கிறார். 1983 கலவரங்கள்,அதன்பின் 2009வரை நடைபெற்றஅனர்தங்களுக்கு இப்போதுதான் ஒருவிடிவுதெரியும்போதுஉங்களுடையமுட்டாள்த்தனமானஅறிக்கைகள் நீங்கள் தமிழருக்காகஅரசியல் செய்கிறீர்களாஅல்லதுபெரும்பான்மையினத்துக்குசாதகமானஅரசியல் செய்கிறீர்களாஎனசாதாரணபொதுமகனுக்குமாத்திரமல்லஎங்களுக்கேபுரியாமல் பெரும் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் கூட்டணியில் இருக்கும்வரைகடிதம் எழுதும் பணியைமாத்திரமேசெய்வீர்கள்! மக்களுக்குஎந்தவிதமானஉருப்படியானபணியை - கூட்டமைப்பில் எவருமேசெய்வதாக இல்லை! இதில் நீங்களும் அடங்குவீரகள்! நாம் ஏதாவதுசெய்யவேண்டும் - இல்லாவிட்டால் ஒதுங்கியிருப்பதுமேல் எனக் கருதி இம்முடிவைஎடுத்துள்ளேன்.

என்றும் மக்கள் நலனில் அக்கறையுள்ள,

(ஒப்பம்)தங்க. முகுந்தன்.

தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு ஒரு பதில்!


தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்று நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்திருந்த தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் அவர்கள் தேர்தல் முடிவுகளைப் பற்றி அறிந்திருக்காதது – ஏளனத்துக்குரியது! கூட்டமைப்புக்கு வடக்கில் பாரிய பின்னடைவு என்பதையும் ஏனைய கட்சிகள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன என்பதையும் பகிரங்கமாக ஏற்க துணிவில்லை என்றே கருதமுடிகிறது!

2004 பாராளுமன்றத் தேர்தலில் ஏகப்பிரதிநிதித்துவத்தைக் கூறி மக்களிடம் பெற்றவாக்குகள் வடக்கில் 348,155. கிழக்கில் 285,499.

2008 இறுதிகளிலும் 2009 முற்பகுதியிலும் மக்கள் கொல்லப்படும்போதும் விடுதலைப் புலிகள் அழியும்வரை மௌனித்திருந்தபின் 2010ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பெற்றவை 106,792. கிழக்கில் 126,398.

2012ல் கிழக்கில் நடந்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 193,827.

2013ல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நீதியரசர் முதலமைச்சராக போட்டியிட்டுப் பெற்ற வாக்குகள் 353,595.

2015ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு பெற்றது வடக்கில் 297,463. கிழக்கில் 218,500.

தற்போது நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் கூட்டமைப்பு 200,241. கிழக்கில் 225,741.

கூட்டமைப்பின் வளர்ச்சி கிழக்கில் இருந்தாலும் வடக்கில் வீழ்ச்சி உண்மையானதே!

கூறப்பட்டவை சரியான விபரங்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்து இதனை முடிக்கின்றேன்.

தங்க. முகுந்தன். முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர்.

16.03.2018.

வியாழன், 30 ஜூன், 2016

ஜாக்சன் துரை” கலை இயக்குனர் T.N கபிலன் - ஓர் ஈழத்தமிழர்


இலங்கையில் தயாரிக்கப்பட இருக்கும் சிங்கள தமிழ் மொழியில் “ரவீந்திரன்" எனும் திரைப்படத்திற்கு காட்சி அமைப்புக்களைத் தெரிவு செய்யும் கலை இயக்குனராக T.N. கபிலன் பதிவாகியுள்ள நிலையில் ஆடி முதலாந்திகதி வெளிவரும் பிரமாண்டமான நகைச்சுவையும் திகிலும் கலந்த "தரணீதரன்" இயக்கி "சத்யராஜ்" மற்றும் "சிபிராஜ்" நடிக்கும் “ஜாக்சன் துரை” திரைப்படத்துக்கும் கலை இயக்குனராக பணிபுரிந்திருப்பது ஈழத்தமிழராகிய எமக்கெல்லாம் பெருமையளிக்கிறது! இத்திரைப்படம் தெலுங்கிலும் “டோரா” என அதே நாளில் வெளிவருகிறது!

திரைப்படம் ஒன்றை சாதாரணமாகப் பார்க்கும் நாம் நடிகர் நடிகைகளின் நடிப்பை மாத்திரமே உற்றுக் கவனிப்போம்! இவற்றுக்கு மேலாக திரைப்படத் தயாரிப்பில் பல முக்கிய கட்டங்களை அறியும் ஆவல் எமக்குக் கிடையாது! அதனை எண்ணியும் பார்ப்பதில்லை!

திரைப்படம் ஒன்றுக்கு மூலமான கதையை எழுதி இது வேறொருவருடையதாயின் அதற்கான உரிமைகளைப் பெற்று படம் எடுக்க வேண்டிய நிதியை ஒதுக்கீடுசெய்து, படிப்பிடிப்புக்கு நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுத்து, பின்னர் படக்குழுத் தெரிவு - இடம் மற்றும் காட்சி அமைப்புக்கள் உருவாக்கம் போன்றவற்றின் பின் எடுக்கப்பட்ட காட்சிகளை பொருத்தி தொடுத்து ஒலிப்பதிவு செய்யப்பட்டு விநியோகிஸ்த்தர்கள் மூலம் திரையரங்கில் திரைப்படம்வெளிவருகிறது! அத்தோடு குறுந்தகடுகளில் ஏற்றப்பட்டு தொலைக்காட்சிகளிலும் திரையிடப்படுகிறது!

திரைப்படங்களிலும் சரி, தொலைக்காட்சி மற்றும் நாடகங்களிலும் சரி காட்சிக்கான சூழலை வடிவமைத்து ரசிகர்களை கதைக்குள் கொண்டு செல்வதில் கலை இயக்குனர்களுக்கு முக்கிய பங்குண்டு.

இந்திய சினிமாவில் ஏற்கனவே வெளியாகிய வேணு அரவிந் இயக்கிய ஜெயராம் நடித்த “சபாஷ் சரியான போட்டி” “சுந்தரேஸ்வரன்” இயக்கி “பிருத்வி” நடித்த “பதினெட்டாம் குடி எல்லை ஆரம்பம்” “கே. திருப்பதி” இயக்கிய “முத்து நகரம்”, “கே. ஐ. ரஞ்சித்” இயக்கி “அசோக்” நடித்த “கோழி கூவுது” போன்றவற்றிலும் T.N. கபிலன் கலை இயக்குனராக பணியாற்றியதுடன், சின்னத்திரை - விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர்களான(மெகா) “என் பெயர் மீனாட்சி”, “அவள்”, “பிரிவோம் சந்திப்போம் - 1”, “சரவணன் மீனாட்சி”, “பிரிவோம் சந்திப்போம் - 2”, “தெய்வம் தந்த வீடு”, “புது கவிதை”, “தாயுமானவள்”, “ஆண்டாள் அழகர்” என்பவற்றுக்கும் கலை இயக்குனராகப் பணிபுரிந்தவர் TN. கபிலன்.

நாட்டில் நிலவிய அசாதாராண சூழ்நிலைகளால் 2008இல் இந்தியாவுக்கு குடிபெயர்ந்த TN கபிலன் தன் தனித்திறமையால் முன்னுக்கு வந்தவர். இலங்கையின் வடபாகத்தில் கரவெட்டி – துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தம்பையா நவரட்ணராஜா கபிலன் 25 ஆண்டுகாலம் ஓவியப் பணியில் ஈடுபாடுடையவராவார்.

ஜாக்சன் துரை திரைப்படத்தில் 1940களில் நடைபெற்ற பிரிட்டிஷ் - இந்திய யுத்தச் சூழலை தனது அபார கற்பனைத் திறனைக் கொண்டு கபிலன் காட்சிகளை அமைத்திருப்பது வியப்புக்குரியது!

ஒரே இடத்தில் 11 வித்தியாசமான காட்சி அரங்குகளை ஏற்படுத்தி பண விரயத்தைத் தடுத்து தன் வித்தையைச் செய்து அனைவரதும் பாராட்டைப் பெற்றிருக்கும் கலை இயக்குனர் T.N. கபிலன் மேன்மேலும் வளர்ந்து சிறந்த ஒரு கலை இயக்குனராக மிளிர வேண்டுமென்பதே ரசிகர்களது எதிர்பார்ப்பாகும்!

புதன், 1 ஜூன், 2016

Someetharan's - Burning Memories - Jaffna Library Documentry Film


கிருத்தியத்தில் பதிவான எனது கட்டுரையை மீள பதிவிடுகிறேன்!

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 7)

4.சோமீதரனின் எரியும் நினைவுகள் ஆவணப்படம் - ('Burning Memories'- A Video documentary by Someetharan)

ஊடகவியலாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான சிறீதரன் சோமீதரன் மிகச் சிரமப்பட்டு இந்த ஆவணப்படத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதுபற்றிய விபரங்களை அவர்தனது காற்றோடு பதிவிலும், கானாபிரபா தனது மடத்துவாசல் பிள்ளையாரடி பதிவில் - எரியும் நினைவுகள் உருவான கதை என்ற சோமிதரனின் பேட்டியிலும் விபரமாகப் பார்க்கலாம்.காலச்சுவடு சஞ்சிகையிலும் இதுபற்றிய விபரமான கட்டுரைகள் இருக்கின்றன.இவற்றைவிட பல பத்திரிகைகள் உள்ளூரிலும், வெளியூரிலும் ஆதாரமாக உண்மையைக் கூறியிருக்கின்றன (இவற்றை விரிவாகப் பார்க்க http://www.madathuvaasal.com/2008_06_01_archive.html, http://somee.blogspot.com, http://www.kalachuvadu.com இணையத் தளங்களுக்குச் சென்று பார்க்கலாம்)

இப்போது எனது குறிப்புக்கு வருகிறேன்.பல தடவைகள் மிக உன்னிப்பாக கவனித்தே இக்குறிப்பு எழுதப்படுகிறது. காரணம் எமக்கு - தமிழர்களுக்கிருக்கும் ஒரே ஆவணம் தற்போது இதுதான். சம்பந்தப்பட்டவர்கள் பலரையும் சந்தித்து அவர்களிடமிருந்து நேரடிச் சாட்சியங்களைப் பெற்றிருப்பது மிகப் போற்றுதலுக்குரிய விடயமாகும். மிக அருமையாகப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை ஆவணப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களுள் மிகமுக்கியமானவை

1. 31.5.1981 என ஆங்கிலத்தில் பதிவாகி இருக்கும் தடயத்தை மாற்றுதல். ஆணையாளர் திரு. சிவஞானம் விபரமாக ஜுன் 1 இரவு எனக் குறிப்பிடுகிறார்.

2. அடிக்கல் நாட்டப்பட்ட விடயம் வரும்போது 2 அடிக்கல் சம்பந்தமான கற்கள் அங்கே பதியப்பட்டுள்ளது. மொத்தம் 5. அவை பதியப்பட வேண்டும்.

3. பேட்டியில் அல்லது விளக்கமளிக்கும் சாட்சிகளாக நடந்த சம்பவங்களைச் சொல்பவர்கள் திகதி நேரம் என்பனவற்றைச் சொல்ல இடமளித்திருக்க வேண்டும். இருவருடைய செவ்வியில் இது இல்லை.

4. ஆவணப்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றதைக் குறிப்பிடும்போது அமிர்தலிங்கம் - எதிர்க்கட்சித் தலைவர் என்று இருக்கிறது. அவரது படம் காட்டப்படவில்லை. ஆவணப்படுத்தலில் முக்கியமானது குறிப்பிடப்படும் நபரை யாரென உறுதிசெய்யவேண்டும். இதற்கு ஒரு உதாரணமாக கடந்த ஒரு வாரத்தினுள் ஒரு செய்தியில் (தினக்குரல்) இரா. துரைரத்தினம் யார் - துரைரட்ணசிங்கம் எம்.பி யாரென தெரியாமல் படத்தைப் பிரசுரித்திருந்தது.

5. பத்திரிகைச் செய்திகள் தெளிவாக திகதி எந்தப் பத்திரிகை என்பவை விளங்கவில்லை. மங்கலாக உள்ளது.



இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்ட பின் 2009 may - June (சரியான திகதி தெரியவில்லை) இறுதிப்பகுதியில் நான் சோமிதரனுடன் தொடர்புகொண்டு இதனுடைய பிரதியைப் பெற முயற்சிசெய்தேன். முடியவில்லை. youtubeஇலிருந்து தரைவிறக்கம் செய்தே இந்த விபரங்களைப் பதிவிடுகிறேன்.இன்றுவரை அது என்கைகளுக்கு வரவில்லை. குறித்த ஆவணப்படத்தின் பிரதி கைக்குக் கிடைத்ததும் திருத்தங்கள் மேலும் இடப்படலாம்.


5. Wikipediya - எவரும் தொகுக்கக்கூடிய கலைக்களஞ்சியம் என்ற மகுட வாசகத்தைக் கொண்ட விக்கிபீடியாவினையே தேடல்களுக்காக நான் முதலில் பயன்படுத்துகிறேன். 285 மொழிகளில் செயற்படும் பன்மொழி இணையக் களஞ்சியத்திலும் யாழ்ப்பாண நூலகம் பற்றிய தொகுப்பில் எரிக்கப்பட்டது மே 31 என்றே ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கிறது.

The burning of the Jaffna library (Tamil: யாழ் பொது நூலகம் எரிப்பு, Yāḻ potu nūlakam erippu) was an important event in the Sri Lankan civil war. An organized mob of Sinhalese origin went on a rampage on the nights of May 31 to June 1, 1981, burning the Jaffna public library. It was one of the most violent examples of ethnic biblioclasm of the 20th century.Term[›] At the time of its destruction, the library was one of the biggest in Asia, containing over 97,000 books and manuscripts.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

தற்போது அந்த திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது! This page was last modified on 31 May 2016, at 04:26.

The burning of the Jaffna library (Tamil: யாழ் பொது நூலகம் எரிப்பு, Yāḻ potu nūlakam erippu) was an important event in the Sri Lankan civil war. An organized mob of Sinhalese origin went on a rampage on the night of June 1, 1981, burning the Jaffna Public Library. It was one of the most violent examples of ethnic biblioclasm of the 20th century.Term[›][1] At the time of its destruction, the library was one of the biggest in Asia, containing over 97,000 books and manuscripts.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது