சனி, 7 மே, 2016

பூரண திருப்தி!


எமது நூல் நிலையத்தைக் கல்விக் கோவிலாகவேநான் பெரிதும் மதித்து தினமும் ஒருதடவையாவது தரிசித்து படித்து எனது அறிவைப் பெருக்கி வருகின்றேன். மேலும் அருகிலிருக்கும் தந்தை செல்வா சமாதியையும் தினமும் துதித்து இரு கோவில்களையும் ஒரு தடவையாவது வலம் வருகிறேன். அருகிலிருக்கும் முனியப்பர் கூட அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதையை எனக்கும் கொடு என்று கேட்டதற்கு அமைவாக அவரையும் இடையிடை சென்று தரிசித்து வருகிறேன். கடந்த 01.06.2015 நூல்நிலையம் பற்றிய எனது நூல் வெளியீடு பூரண திருப்தியை எனக்கு அளித்தது! 14.02.2003இல் நடக்க இருந்த திறப்பு விழா முதல் இன்று வரை ஒரு பெரிய பாரமாக இருந்த ஒரு சுமையை இறக்கி வைத்த சந்தோஷம்! (பாரமென்பதைவிட ஒரு தவம் - விரதம் என்றும் ஏன் அதற்கு மேல் ஒருவெறி என்றும் சொல்லலாம்) - 100 வீதமான திருப்தி இல்லாவிட்டாலும் இந்த நாள் வரைக்கும் என்னை உயிருடன் வாழ வைத்த அந்த பரம்பொருளுக்கு நன்றிகள்!

“நூலகத்தின் மேல் எனக்கு தீராத பற்று இருக்கிறது. மாநகரசபை உறுப்பினர்களில் எத்தனைபேருக்கு வாசிக்கும் பழக்கம் இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு சிறுவயதிலிருந்தே அந்தப் பழக்கம் இருப்பதுடன் எரிக்கப்பட்ட பெரிய நூல்நிலையத்தில் 1981க்கு முன்னரே அம்புலிமாமா நட்சத்திரமாமா போன்ற புத்தகங்களை வாசித்தவன் என்ற வகையிலும் நூலகத்தின் அருகிலிருந்த சுப்பிரமணியம் பூங்காவில் விளையாடியவன் என்ற ரீதியிலும் எனக்கு இவை மீண்டும் இருந்ததுபோல உடனேயே கட்டப்பட வேண்டும் என்ற ஆதங்கம் உண்டு. இதை நான் எமது மாநகரசபை பொன் விழா மலரின் வாழ்த்துச் செய்தியில் - மீண்டும் யாழ் நகர் தனது பழைய பொலிவைப் பெற்றால் அந்த மன நிறைவை நீண்ட நாட்கனவை அடையும் ஒருவனாக நானும் இருப்பேன். கனவு நனவாவது காலத்தின் கடமை. நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மூலரின் மந்திரத்தை தெய்வம்தான் நிலைநிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டதை நினைவுபடுத்துவது பொருந்தம் என நினைக்கின்றேன்” என 22.02.2003 திகதியிட்டுவெளியட்ட யாழ் பொது நூலக வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்ற செய்தியில் குறிப்பிட்டிருந்தேன்.

கடந்த 01.06.2015 அன்று நடைபெற்ற நிகழ்வை அப்படியே தொகுத்துத் தருவது எனக்கும் ஒரு திருப்தியை ஏற்படுத்தும். ஏனெனில் இதுவரை எந்த ஒரு ஊடகமும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டியஅவசியமும் இல்லைத் தானே! எம்மவர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்ய்ப்பட்ட ஒரு அபலைப் பெண்ணின் கதைகளை தொடராக எழுத வேண்டிய கட்டாயம் இருக்கும் போது இந்தச் செய்திகள் ஒன்றும் முக்கியமானவைகள் அல்லவே! நாம் எமது 20வயதுகளில் எமது மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் நூலகத்தை நடத்தி வந்த காரணமும் பொது நூலகத்தில் அக்கறை கொள்ள வைத்திருக்கும்! கொழும்பில் இருந்த காலப்பகுதியில் 1990களில் மாநகர சபைபொது நூலகம், தேசிய நூலகம் மற்றும் தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனம் போன்றவற்றை உபயோகித்து வந்ததும், சுவிற்சர்லாந்தில்வசித்த காலத்தில் 2007 – 2012 எமதுமாவட்ட நூலகத்தைப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

நூலகருக்கும், ஆணையாளருக்கும் கடிதம் எழுதி அவர்களது பூரண ஒத்துழைப்புடன் இந்த நூல் வெளியிடப்பட்டது. எனது வெளியீடு என்ன நேரம் என்று கேட்டு அதற்கு முன்னுரிமை அளித்து பின்னர் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்வுக்காக கேட்போர் கூடத்தையும் ஏற்பாடு செய்திருந்தனர். ஏனக்கு எரிக்கப்பட்ட நூலகக் கட்டத்திலேயே நிகழ்வு நடைபெற வேண்டும் என்பதால் முன் வரவேற்புப் பகுதியிலேயே நிகழ்வை ஏற்பாடு செய்தேன். காலை 9.15க்கு எனது நிகழ்வை ஆரம்பிக்க இருந்த போதிலும் 9.45க்கே நிகழ்வு ஆரம்பமானது. முதலில் நூலகத்தை ஆரம்பித்த பெரியார் - பரோபகாரி புத்தூர் சக்கடத்தார் எனஅழைக்கப்படும் திரு. க.மு. செல்ல்ப்பா அவர்களின் படத்திற்கு முன்பாக விளக்கு ஏற்றப்பட்டது. முன்னாள் மூளாய் இந்துஇளைஞர் மன்றத்தின்தலைவர் திரு. கா.பார்த்தீபன்அவர்கள் விளக்கை ஏற்றி வைத்தார். அடுத்து முன்னாள் நூலகர் திரு. க. தனபாலசிங்கம் அவர்கள் மறைந்த வண. பிதா. கலாநிதி டேவிட் அடிகளாரின் விளக்கை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நூலகத்தின் துணை நூலகர் திருமதி. வசந்தா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் நூலக வாசகர் என்ற வகையில் திரு. சதீஸ் அவர்களும் விளக்கை ஏற்றினர். விசேடமாக வைக்கப்பட்ட மெழுகுதிரியை நான் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்தேன். வருகை தந்திருந்த நூலக வாசகர்கள் அனைவரும் மலரஞ்சலி செய்த பின் நூலை வெளியிட்டு வைக்குமாறு முன்னாள் நூலகரை வேண்டி அவரை அழைத்த பின் நூலைப் பெற்றுக் கொள்ளுமாறு துணை நூலகரை அழைத்து நூல் வெளியிடப்பட்டது. முதற்பிரதியை துணை நூலகர் எமது மூளாய் இந்து இளைஞர் மன்றத் தலைவருக்கு கையளித்தார். தொடர்ந்து வருகைதந்த அனைவருக்கும் நூல் வழங்கப்பட்டது. பின் 2 நிமிடநேர மௌன அஞ்சலியும், தமிழ் வாழ்த்துப் பாடலுடனும் நிகழ்வு நிறைவுபெற்றது. நிறைவில் வருகை தந்த நூலகர் திருமதி. சுகந்தி சதாசிவமூர்த்தி அவர்கள் மலரஞ்சலி செலுத்திய அவருக்கு - முன்னர் என்னால் எழுதப்பட்ட யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட நினைவு இன்று – பலருக்கு உண்மைநிகழ்வுகள்தெரியாது (2013, 2014) என்ற எனது கிருத்தியப்பதிவின் பிரதியை வழங்கினேன். 10.00மணிக்கு முன்னர் நிகழ்வை முடித்த பின் கேட்போர் கூடத்தில் நடந்த நிகழ்வையும் பார்த்து திரும்பும்போது துவிச்சக்கர வண்டிப் பாதுகாப்பு நிலையத்தில் நூலைப் பற்றி இருவர் விமர்சித்துக் கொண்டிருந்த வேளையில் நூலகத்தை விட்டு வெளியேறி வந்த இரு வணக்கத்திற்குரிய பாதிரியார்களைக் கண்டதும் அவர்கள் யாரென்று என்னுடன்கதைத்துக் கொண்டிருந்த நண்பனிடம் கேட்க அவர் சொன்னார் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழையமாணவர்கள் எனவும் நான் அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திய பொழுது அவர்கள்எனது கிருத்தியத்தை தாம் வாசிப்பதாக குறிப்பிட்டு அளவளாவினார்கள். நூலகரிடம் தாம் வண. பிதா டேவிட் அடிகளாரின் முழு உருவப்படத்தை வழங்கியதாக சொல்லியதும் அவர்களிடமிருந்து விடைபெற்று நூலகத்தினுள் சென்றுபார்த்த போது கடந்த வவருடம் என்னால்வழங்கப்பட்ட படம்இருந்த இடத்தில் முழு அளவிலான வண. பிதா. டேவிட் அவரகளுடைய படமிருந்தது! ஏன்னால் அன்று வெளியிட்ட நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன். அந்தப்படத்தைக் கண்டதும் உண்மையிலேயே அவரது ஆத்மா என்பணியை ஆசீர்வதித்தது போலவே நான் உணர்ந்தேன்!மாலையில் அவரது பிறந்த ஊரான தும்பளைக்குச்சென்று அங்கு வருடாவருடம் மறவாது நடைபெறும் நன்றி நிகழ்விலும் பங்கு கொண்டது பூரண மன நிறைவை அளித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக