வெள்ளி, 16 மார்ச், 2018

தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு ஒரு பதில்!


தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவு சரிந்து விட்டது என்று நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்திருந்த தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் அவர்கள் தேர்தல் முடிவுகளைப் பற்றி அறிந்திருக்காதது – ஏளனத்துக்குரியது! கூட்டமைப்புக்கு வடக்கில் பாரிய பின்னடைவு என்பதையும் ஏனைய கட்சிகள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன என்பதையும் பகிரங்கமாக ஏற்க துணிவில்லை என்றே கருதமுடிகிறது!

2004 பாராளுமன்றத் தேர்தலில் ஏகப்பிரதிநிதித்துவத்தைக் கூறி மக்களிடம் பெற்றவாக்குகள் வடக்கில் 348,155. கிழக்கில் 285,499.

2008 இறுதிகளிலும் 2009 முற்பகுதியிலும் மக்கள் கொல்லப்படும்போதும் விடுதலைப் புலிகள் அழியும்வரை மௌனித்திருந்தபின் 2010ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் பெற்றவை 106,792. கிழக்கில் 126,398.

2012ல் கிழக்கில் நடந்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 193,827.

2013ல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நீதியரசர் முதலமைச்சராக போட்டியிட்டுப் பெற்ற வாக்குகள் 353,595.

2015ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு பெற்றது வடக்கில் 297,463. கிழக்கில் 218,500.

தற்போது நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் கூட்டமைப்பு 200,241. கிழக்கில் 225,741.

கூட்டமைப்பின் வளர்ச்சி கிழக்கில் இருந்தாலும் வடக்கில் வீழ்ச்சி உண்மையானதே!

கூறப்பட்டவை சரியான விபரங்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்து இதனை முடிக்கின்றேன்.

தங்க. முகுந்தன். முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர்.

16.03.2018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக